Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வரலாறு காணாத உயர்வு.. பாதுகாப்புத் துறை ஏற்றுமதியில்.. மாஸ் காட்டும் இந்தியா!!

Sekar July 09, 2022 & 10:30 [IST]
வரலாறு காணாத உயர்வு.. பாதுகாப்புத் துறை ஏற்றுமதியில்.. மாஸ் காட்டும் இந்தியா!!Representative Image.

2021-22 ஆம் ஆண்டில் இந்தியா 13,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 54.1 சதவீதம் அதிகம் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிகள் அதிகளவில் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பிற நாடுகளுக்கு சென்றுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் ஏற்றுமதியானது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வரும் திங்களன்று "பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு" என்ற தலைப்பில் ஒரு நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சகம் ஒரு தனியார் துறை நிறுவனத்திற்கும், பாதுகாப்பு ஏற்றுமதியில் சிறப்பாக செயல்பட்ட பொதுத்துறை நிறுவனத்திற்கும் வெகுமதி அளிக்கும் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் பாதுகாப்பு தேவைகளை அதிக அளவில் பூர்த்தி செய்து வரும் நிலையில், தனியார் துறை நிறுவனங்கள் பாதுகாப்பு ஏற்றுமதி சந்தையில் கிட்டத்தட்ட 90 சதவீத பங்கைக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றன.

இதற்கிடையே கடந்த ஆண்டு, இந்திய பொதுத்துறை நிறுவனங்களும் நாட்டின் பாதுகாப்பு ஏற்றுமதியில் 30 சதவீத பங்களிப்பைச் செய்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்