Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,466.56
-22.43sensex(-0.03%)
நிஃப்டி21,991.15
-4.70sensex(-0.02%)
USD
81.57
Exclusive

நீங்க எல்லாம் சிந்திக்கிறதையே நிறுத்திட்டீங்களோ?... கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக முக்கிய நிர்வாகி சர்ச்சை பேச்சு! 

KANIMOZHI Updated:
நீங்க எல்லாம் சிந்திக்கிறதையே நிறுத்திட்டீங்களோ?... கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக முக்கிய நிர்வாகி சர்ச்சை பேச்சு! Representative Image.

பாஜகவுடன் தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை ஆனால் சிறுபான்மை மக்கள் உங்களை என்றும் காக்கின்ற பொறுப்பு அதிமுக-விற்கு உண்டு அதிமுக அமைப்பு செயலாளர் கோ.அரி திருத்தணி கிறிஸ்துமஸ் விழாவில் பேச்சியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள புனித பணி மாதா ஆலயத்தில் அ.தி.மு.க சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக அமைப்பு செயலாளர் திருத்தணி  அரி கலந்து கொண்டார், இக்கூட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது,  அதன் பிறகு கிறிஸ்தவர்களுக்கு வேட்டி, சேலை ஆகியவற்றை அமைப்பு செயலாளர் அரி வழங்கினார்,. 

 மேலும் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களான நீங்கள் அ.தி.மு.க-விற்கு முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு  ஆதரவாக இருந்து உள்ளீர்கள்.  அதனை தொடர்ந்து சிறிய கசப்பான சம்பவமாக பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து அதோடு பாஜக கூட்டணி போய்விடுகிறது, அவர்கள் கொள்கை வேறு  ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக அதிமுக-வை கிறிஸ்தவ மக்கள் நீங்கள்  கடந்த தேர்தலில் எதிரியாக பார்த்தீர்கள். 

ஆனால் பாஜக தேர்தல் கூட்டணி அதோடு அவர்கள் போய்விடுவார்கள்,  ஆனால் இந்த மாநிலத்தை ஆளுகின்ற பொறுப்பு யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை நீங்கள் எல்லாம் கிறிஸ்தவ சமுதாய மக்கள் சிந்திப்பதை நிறுத்தி விட்டீர்கள் என்பதுதான் எங்களுக்கெல்லாம் அச்சமாக இருக்கிறது,

ஏன் என்று சொன்னால் உங்களை எல்லாம் அப்படி மாற்றி இருக்கிறார்கள் சிறுபான்மை மக்கள் உங்களுக்கு எல்லாம் அதிமுக பாதுகாப்பாக இருக்கும் பாஜகவை பற்றி நீங்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை அது ஒரு கட்சி அவர்கள் கொள்கை வேறு ஆகையால் நீங்கள் யாரும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம், ஆனால் அண்ணா திமுகவின் கொள்கை சிறுபான்மை மக்கள் உங்களை காக்கின்றது அதன் கொள்கை ஆகும். என்றும் உங்களுக்கு உறுதுணையாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பார் என்று அரி பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்