Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரீல்ஸ்-ல போட எடுத்த வீடியோ இப்டி நியூஸ்-ல வரும்னு யாருக்கு தெரியும்...!

madhankumar May 27, 2022 & 17:15 [IST]
ரீல்ஸ்-ல போட எடுத்த வீடியோ இப்டி நியூஸ்-ல வரும்னு யாருக்கு தெரியும்...!Representative Image.

மாநகராட்சி குப்பை கூடத்தில் குவிந்திருந்த குப்பைகளை எரித்து ரீல்ஸ் எடுத்து சொந்த செலவில் வேலைக்கு ஆப்பு வைத்துக்கொண்ட சுகாதார ஆய்வாளர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிவருபவர் விவேக். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுத்து போடும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் படங்களில் கதாநாயகர்கள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்கு முன்னால் நடந்துவருவதுபோல தானும் நடந்து வரவேண்டும் அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பதிவிட வேண்டும் என ஆசையை வளர்த்துள்ளார்.

இதனிடையே அதற்கு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்த அவருக்கு கன நேரத்தில் தோன்றிய ஐடியா தான் திருப்பத்தூர் ப.உ.ச. நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கு. அதனை எரித்துவிட்டு அதன் முன்னே நடந்துவந்து வீடியோ எடுக்கலாம் என நினைத்த அவர் அதனை போலவே அங்கு சென்று குப்பையை எரித்துள்ளார். பின்னர் அதன் முன்னர் நடந்துவந்து விதவிதமாக வீடியோ எடுத்துள்ளார். மேலும் தீயில் கிளம்பிய புகைக்கு நடுவே நின்று புகைப்படங்களை எடுத்துத்தள்ளியுள்ளார்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த அவர் இந்த வாரத்திற்கான கன்டென்ட் ரெடி என நினைத்து புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிய அந்த வீடியோவால் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டில் உள்ளார். மேலும் இந்த விடியோவை எடுக்க உதவிய ஊழியர் ஒருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர் அதிகாரிகள். ரீல்ஸ்-க்கு எடுத்த வீடியோ இப்படி நியூஸில் வரும் என அவர் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் போலும் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்