Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5 மாவட்டங்களில் கனமழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Muthu Kumar August 12, 2022 & 13:30 [IST]
5 மாவட்டங்களில் கனமழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!Representative Image.

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவையில் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது.மேலும், ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்