Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பேரறிவாளனை தொடர்ந்து...மற்ற 6பேர் எப்போது விடுதலை...முதல்வர் ஆலோசனை..!

madhankumar May 22, 2022 & 12:30 [IST]
பேரறிவாளனை தொடர்ந்து...மற்ற 6பேர் எப்போது விடுதலை...முதல்வர் ஆலோசனை..!Representative Image.

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரின் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஸ்ரீ பெரம்பத்தூரில் பொதுக்கூட்டத்தி பேசிக்கொண்டிருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என கூறி 7 பேருக்கு கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரறிவாளன் அனுப்பிய கருணை மனு மீது எந்த முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனிடையே நடந்த விசாரணையில் பேரறிவாளனுக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிபிஐயின் முன்னாள் விசாரணை அதிகாரி தியாகராஜன் தெரிவித்தார்.

இந்தநிலையில் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு பின்னர் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.  இந்நிலையில் பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரின் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

உதகையில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் இறையன்பு அரசுதலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்