Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செய்தித்தொடர்பாளர் என்றால் எது வேண்டுமானாலும் பேசலாமா?...நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

madhankumar July 01, 2022 & 13:05 [IST]
 செய்தித்தொடர்பாளர் என்றால் எது வேண்டுமானாலும் பேசலாமா?...நீதிமன்றம் சரமாரி கேள்வி..!Representative Image.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவர் இஸ்லாமிய இனத்தினரின் மனது புண்படும்படி நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

குறிப்பாக கத்தார், சவூதி போன்ற நாடுகள் மிகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். பாகிஸ்தான்,, தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். சில தீவிரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு மனித வெடிகுண்டு தாக்குதல் எச்சரிக்கையும் விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நூபுரசர்மாவின் கருத்தை ஆதரித்து பேசிய இஸ்லாமிய டெய்லர் கன்ஹையா லால் என்பவரை வாடிக்கையாளர்கள் போல் சென்று அவரின் கடையில் வைத்து தலையை துண்டித்து கொன்றனர். மேலும் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றினர், அந்த வீடியோவில் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நுபுர் சர்மா தனது பேச்சால் நாட்டையே தீக்கிரையாகிவிட்டார், உதய்பூரின் கொலைக்கு அவரின் பேச்சே காரணம், மேலும் நுபுர் சர்மாவிற்கு எதிராக பதிவான வழக்குகளில் டெல்லி போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. எனவும் நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா? அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா? அவர் நடந்துகொண்டவிதம், அதன்பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்கக்கேடானது. 

ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்றால், எது வேண்டுமானாலும் சொல்வதற்கு லைசன்ஸ் இல்லை. உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான் நாட்டில் தற்போது நடப்பதற்கு இவரே பொறுப்பு என சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் நுபுர் சர்மா இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்