Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்...அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!

madhankumar June 20, 2022 & 09:31 [IST]
இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்...அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!Representative Image.

தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்துவருகிறது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 692 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று (ஜுன்20) முதல் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற வளாகத்திற்குள் வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்த உத்தரவின் படி நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணைக்கு தொடர்பில்லாத நபர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் வருவாஹே தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

னைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும்,தலா 50 முதல் 100 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்