Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,188.62
-300.37sensex(-0.41%)
நிஃப்டி21,888.80
-107.05sensex(-0.49%)
USD
81.57
Exclusive

ஜனவரி 1-ல் தான் புத்தாண்டு கொண்டாடப்படுமா? இது தான் காரணமா?|New Year History

Editorial Desk Updated:
ஜனவரி 1-ல் தான் புத்தாண்டு கொண்டாடப்படுமா? இது தான் காரணமா?|New Year HistoryRepresentative Image.

உலகம் முழுவதும் பொதுவாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றுதான் புத்தாண்டு ஆகும் .புத்தாண்டு என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது புத்தாடை, பலகாரங்கள், பட்டாசு ,12 மணி புத்தாண்டு வாழ்த்துகள் போன்றவை தான் நமக்கு தெரிந்தவை ஆகும்.  ஆனால் இதை அனைத்தையும் விட ஏன் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது எதற்காக  கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா….?  இதைவிட சிலர் இயேசு பிறந்த தினம் என்று கூறுவார்கள் ஆனால் இயேசுவிற்கும் புத்தாண்டுக்கும் ஏதேனும் சம்மதம் உண்டா…?

மேலும் வரலாற்றை குறிப்பிட்டு பார்க்கையில் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில், பிறகு எதற்காக புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் தமிழ் மற்றும் ஆங்கில மாதத்தின் முதல் நாள் புத்தாண்டு என அனைவரும் கொண்டாடுகிறார். ஏன் புத்தாண்டை இரண்டாக பிரித்தார்கள் இது போல பல கேள்விகளுக்கு விடையாக இந்த பதிவை அதை பற்றி பார்க்கலாம்.

ஜனவரி 1-ல் தான் புத்தாண்டு கொண்டாடப்படுமா? இது தான் காரணமா?|New Year HistoryRepresentative Image

ஏன் புத்தாண்டு

உலக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு என்பது மகிழ்ச்சியான ஒரு பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். இந்த புத்தாண்டின் பின் இருக்கும் ரகசியம் என்னவென்றால் இந்த புத்தாண்டு என்பது முதல் முதலில் நியூசிலாந்து நாட்டில் தான் பிறந்தது. மேலும் இந்த புத்தாண்டானது மாலை நேரத்தில் கொண்டாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகுதான் மற்ற நாடுகளில் பின்பற்றபட்டது. பிற நாடுகளில் பின்பற்றும் போது அவர் அவர் கடவுள் மற்றும் அரசர் பெயர்கேற்ப மாதங்களை  மாற்றியிருக்கிறார்கள். அதை பற்றி கீழே பார்க்கலாம்.

ஜனவரி 1-ல் தான் புத்தாண்டு கொண்டாடப்படுமா? இது தான் காரணமா?|New Year HistoryRepresentative Image

மாதங்களின் பெயர்கள்

அவர்கள் வாழ்ந்த காலத்தில் மொத்தம் 10 மாதங்கள் உள்ளன. ஆனால் 12 மாதம் எப்படி வந்ததுதான கேக்றீங்க? அதை பற்றி பார்க்கலாம். ஆனால் இந்த 10 மாதத்திற்கு கூட பல வரலாறு இருக்கிறது. அதை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். 

இந்த 10 மாதத்தில் ஒவ்வொரு மாதமும் அந்தந்த ஆட்சியாளர்களின் கடவுள்  மற்றும் அரசர்களின் பெயரை மாதத்தின் பெயராக வைத்துள்ளார் என்பது ஆச்சிரியமாகத்தான் உள்ளது. ஆனால் அதுதான் உண்மை .

இதில் உள்ள முதல் மாதம் ஜனவரி மாதம் ஆகும். இந்த மாதமானது இப்பொழுதுதான் முதல் மாதமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த ஜனவரி மாதம் ஆனது ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரிலிருந்து எடுத்தது ஆகும். இதுபோலவே பிப்ரவரி  என்ற பெயரும் இவர்கள் வைத்துள்ளார்.

ஜனவரி 1-ல் தான் புத்தாண்டு கொண்டாடப்படுமா? இது தான் காரணமா?|New Year HistoryRepresentative Image

April fool

மேலும் இந்த மார்ச் மாதம் கூட இவர்களின் கடவுளான  மார்ஸ் பெயரை சூட்டியுள்ளார்கள். 15 ஆம்  நூற்றாண்டில் தான் ஏப்ரல் மாதம் முதல் மாதமாக வைத்திருந்தார். இதனை மாற்றி போப்பாண்டவர்கள் ஜனவரிக்கு மாற்றினார். இதனை ஏற்றுக்கொள்ளாத  பிற ஐரோப்பிய மக்களை பார்த்து முட்டாள்களின் மாதம் என அழைக்க தொடங்கியதால் ஏப்ரல் மாதம் முட்டாள்களின் மாதம் என அழைக்கத் தொடங்கினார்கள்.

என்ன இதற்கு பின்னால் இப்படி ஒரு கதையா என யோசிக்கிறீர்களா? அது தான் உண்மை. மேயஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரை மே மாத்திலும், ஜூனோ என்ற ரோமானிய கவுளின் பெயரை  ஜூன் மாத்திற்கும் வைத்துள்ளார்.

ஜனவரி 1-ல் தான் புத்தாண்டு கொண்டாடப்படுமா? இது தான் காரணமா?|New Year HistoryRepresentative Image

மாதத்தில் மன்னர்களின் பெயர்கள்

கடவுள்களின் பெயரில் இருந்து  மாதத்தின் பெயரை வைத்தது போல சில மன்னரின் பெயர்களும் மாதங்களின் பெயர்களாக வைக்கப்பட்டுள்ளது. அவை ஒன்று ஜூலியஸ் மன்னரின் பெயரை ஜூலைக்கும். அகஸ்டில் என்ற பெயரை ஆகஸ்ட் மாதத்திற்கும் சூட்டியிருக்கின்றனர்.

மீதமுள்ள நான்கு மாதமும் லத்தீன் மொழியில் உள்ள பெயர்களாகும். இப்படித்தான் இந்த கடைசி காலண்டர் அதாவது க்ரீகோரியன் என்ற இப்பொழுது இருக்கும் காலண்டர் வந்தது. இதைவிட நாட்களை மாற்றியதும் நடந்திருக்கிறது.

ஜனவரி 1-ல் தான் புத்தாண்டு கொண்டாடப்படுமா? இது தான் காரணமா?|New Year HistoryRepresentative Image

லீப் இயர்

இதை அடுத்து வருடத்தின் லீப் இயர் மாதம் , ஒரு மாதத்திற்கு 28, 30, 31, போன்ற நாட்கள் பிரிக்கப்பட்டு பின் தற்பொழுது இருக்கும்  காலண்டர் உருவாக்கப்பட்ட்து. அதுவே தற்பொழுது அனைவரும் பயன்படுத்திகொண்டிருக்கும்  காலண்டர் ஆகும். அப்பப்பா! இத்தனை வரலாறு கொண்டு புத்தாண்டு கொண்டாடப்படுகிறதா? இது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையிலேயே உள்ளது.

இதில் புத்தாண்டு எதனால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இன்னும் சில புத்தாண்டு பற்றிய சிறப்புகளை காண ஆவலுடன் இருங்கள். 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்