Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...மாணவ மாணவிகள் கொண்டாட்டம்..!

madhankumar July 31, 2022 & 13:06 [IST]
ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...மாணவ மாணவிகள் கொண்டாட்டம்..!Representative Image.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கோவில் திருவிழாக்கள் எளிதாக நடத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல்  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் கோவில் திருவிழாக்கள் விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனை  அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள்  உறுதி செய்து வருகிறது. 

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள எந்த கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆலயத்தின் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ம் தேதி 10-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது.

இந்த திருவிழாவை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது, இதனைசரிக்கட்டும் விதமாக வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்