Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹவுரா - பூரி வந்தே பாரத் ரயில்: புறப்படும் நேரம், டிக்கெட் விலை மற்றும் முழு விவரங்கள்..! | Howrah to Puri Vande Bharat Train

Gowthami Subramani Updated:
ஹவுரா - பூரி வந்தே பாரத் ரயில்: புறப்படும் நேரம், டிக்கெட் விலை மற்றும் முழு விவரங்கள்..! | Howrah to Puri Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆனது, இந்தியாவின் இரண்டாவது அதிவேக ரயில் ஆகும். முதலாவது இடத்தில் இருப்பது கதிமான் எக்ஸ்பிரஸ் ஆகும். வந்தே பாரத் ஆனது ரயில் 18 எனவும் அழைக்கப்படுகிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, Wi-Fi வசதி, GPS, ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.

வரும் மே 15 ஆம் தேதி இந்தியாவின் 16வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுரா முதல் பூரி வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் அதே பாதையில் செல்லக்கூடிய மற்ற இரயில்களை விட முன்னதாகவே ஹவுராவில் இருந்து பூரிக்கு சென்றடைந்து விடும். இந்த பதிவில் ஹவுரா – பூரி வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிவரங்களைப் பார்க்கலாம்.

வழி

இந்த இரயில் இயங்கும் காலம் குறித்த விவரங்கள் விரைவில் அப்டேட் செய்யப்படும். ஹவுரா – பூரிக்குச் செல்லும் இந்த வந்தே பாரத் இரயில் குர்தா சாலை சந்திப்பு, புவனேஸ்வர், கட்டாக், ஜாஜ்பூர் கியோஞ்சர் சாலை, பத்ரக், பாலசோர், ஹல்டியா உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். பொதுவாக, ஹவுரா – பூரியின் பயண நேரம் பயணம் செய்யும் இரயில்களைப் பொறுத்து மாறுபடும். அதன் படி, அதிக வேகத்தில் செல்லக்கூடிய இரயில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆனது 7 மணி 35 நிமிடங்களில் செல்லும். அதே போல, மெதுவான வேகத்தில் இயங்கும் இரயில் 9 மணி 55 நிமிடங்களில் செல்லும். ஆனால், இந்த வந்தே பாரத் இரயில் ஆனது சுமார் 5 மணி 30 நிமிடங்களிலேயே சென்று விடும்.

வந்தே பாரத் இரயில்

துவங்கப்படும் நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

ஹவுரா - பூரி

 

பூரி - ஹவுரா

மே 15, 2022

விரைவில் அப்டேட் செய்யப்படும்

500கிமீ.

5 மணி 30 நிமிடங்கள்

05.50 AM – 11.50 PM

 

 

02.00 PM – 07.30 PM

 

ஹவுரா - பூரி வந்தே பாரத் நேர அட்டவணை:

 

ஹவுரா - பூரி

வந்தடையும் நேரம்

இரயில்வே நேரம்

புறப்படும் நேரம்

இரயில்வே நேரம்

ஹவுரா

-

05.50

குர்தா சாலை சந்திப்பு

விரைவில் அப்டேட் செய்யப்படும்

புவனேஸ்வர்

கட்டாக்

ஜாஜ்பூர் கியோஞ்சர் சாலை

பத்ரக்

பாலசோர்

ஹல்டியா

பூரி

23.50

-

 

பூரி - ஹவுரா வந்தே பாரத் நேர அட்டவணை:

 

பூரி - ஹவுரா

வந்தடையும் நேரம்

இரயில்வே நேரம்

புறப்படும் நேரம்

இரயில்வே நேரம்

பூரி

-

14.00

ஹல்டியா

விரைவில் அப்டேட் செய்யப்படும்

பாலசோர்

பத்ரக்

ஜாஜ்பூர் கியோஞ்சர் சாலை

கட்டாக்

புவனேஸ்வர்

குர்தா சாலை சந்திப்பு

ஹவுரா

19.30

-

 

கட்டணம்

இந்த வந்தே பாரத் இரயிலுக்கான கட்டணம் ஆனது பயண வகுப்பைப் பொறுத்து மாறுபடுகிறது.

வந்தே பாரத் இரயில்

சேர் கார் கட்டணம்

எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு கட்டணம்

ஹவுரா - பூரி

ரூ.1590 இதில் கேட்டரிங் கட்டணம் ரூ.308 ஆக இருக்கும்.

ரூ.2,815 கேட்டரிங் கட்டணம் ரூ.369 உட்பட

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்