Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

முகமது நபிகள் குறித்து அவதூறு.. ஹைதராபாத்தில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்!!

Sekar November 12, 2022 & 19:20 [IST]
முகமது நபிகள் குறித்து அவதூறு.. ஹைதராபாத்தில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்!!Representative Image.

ஐதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவர், முகமது நபி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளைக் கூறியதற்காக, கடந்த நவம்பர் 1 ஆம் தேதி அவரது விடுதி தோழர்களால் தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு உள்ளான ஹிமாங்க் பன்சால் என்ற மாணவர், ஹைதராபாத்தில் உள்ள ஐஎப்எச்இ'இல் இளங்கலை சட்டம் பயின்று வரும் மாணவர் ஆவார்.

போலீஸாரின் கூற்றுப்படி, நவம்பர் 11 ஆம் தேதி மாணவர் அளித்த புகாரில், "நவம்பர் 1 ஆம் தேதி, எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறையில் கல்லூரி வளாகத்தில் 15-20 நபர்கள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினர்" என்று கூறினார்.

அவர் மற்ற மாணவர்களால் தள்ளப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அவரை முகத்தில் குத்தினார்கள், அறைந்தார்கள் மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் உதைத்ததோடு, பிறப்புறுப்பைத் தொட்டு சீண்டியுள்ளனர் மற்றும் சில ரசாயனங்கள் மற்றும் பவுடர்களை வலுக்கட்டாயமாக ஊட்டியுள்ளனர் என பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பன்சால், தனது புகாரில், ஒரு மாணவர் தனது பிறப்புறுப்பை வாயில் வைக்க முயன்றதாகக் கூறினார். மேலும் எனது ஆடைகளை கிழிக்க முயன்றனர். என்னை நிர்வாணமாக்கி, ஒருவரையொருவர் அடித்தனர். அப்போது சாகும் வரை அடி என்று கூச்சலிட்டதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடையே பரவலாக பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனக்கு முகம் முழுவதும் காயங்கள் இருப்பதாகவும், கண் குழி மற்றும் மூக்கு வீங்கியிருப்பதாகவும் மாணவர் தனது புகாரில் மேலும் கூறியுள்ளார்.

மேலும், மாணவர்கள் அவரை மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, பாதிக்கப்பட்டவர் ஐஎப்எச்இ அதிகாரிகளுக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உடல் ரீதியான தாக்குதல் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் குறித்த முறையான புகார் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். 

அவரது கடிதத்தின்படி, அவர் ஒரு நண்பருடன் உரையாடலின் போது நபிகள் நாயகத்திற்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களைக் கூறினார். அவர் தங்கள் அரட்டைகளை பகிரங்கப்படுத்திய பிறகு மற்ற மாணவர்கள் அதை அறிந்து, இந்த சமபவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தெலுங்கானா ராகிங் தடைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்