Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிலியில் நடந்த காட்டுத் தீயால் 22 பேர் பலி! சர்வதேச நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட அறிவுறுத்தல்.!

Gowthami Subramani Updated:
சிலியில் நடந்த காட்டுத் தீயால் 22 பேர் பலி! சர்வதேச நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட அறிவுறுத்தல்.!Representative Image.

தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

சிலியில் நடந்த காட்டுத் தீயால் 22 பேர் பலி! சர்வதேச நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட அறிவுறுத்தல்.!Representative Image

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென் அமெரிக்காவில் வெப்பம் நிலவி வருகிறது. இதனால், பல இடங்களில் வெப்பக் காற்று வீசுகிறது. இதன் காரணமாக, நாடு முழுவதும் 150-ற்கும் அதிகமான வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 34 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் தீ வேகமாக பரவியுள்ளது.

சிலியில் நடந்த காட்டுத் தீயால் 22 பேர் பலி! சர்வதேச நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட அறிவுறுத்தல்.!Representative Image

இதனைத் தொடர்ந்து தீயைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து உள்துறை அமைச்சரான கரோலினா கூறுகையில், காட்டுத் தீ பரவும் இடங்களில் 1,429 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் காட்டுத் தீயில் சிக்கி 554-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிலியில் நடந்த காட்டுத் தீயால் 22 பேர் பலி! சர்வதேச நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட அறிவுறுத்தல்.!Representative Image

மேலும், காட்டுத் தீ காரணமாக சுமார் 14,000 ஹெக்டேர் அளவிலான நிலம் எரிந்துள்ளதாகவும், இதில் சிலி நாட்டிலேயே அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஜனாதிபதி கேப்ரியல் போரிக், சர்வதேச நாடுகள் உதவிக்கரம் அளிக்க வேண்டும் என ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். சிலியின் தென் மத்தியப் பகுதியில் எரியக்கூடிய தீயை எதிர்த்துப் போராட தீயணைப்பு வீரர்களையும், இயந்திரங்களையும் அனுப்பும் எனவும் கூறப்பட்டு இந்த போராட்டத்திற்கு உதவிய அர்ஜென்டினாவிற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்