Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வடகொரியாவில் அதிகரிக்கும் கொரோனா...அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி அறிவிப்பு..!

muthukumar May 17, 2022 & 06:47 [IST]
வடகொரியாவில் அதிகரிக்கும் கொரோனா...அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி அறிவிப்பு..!Representative Image.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவியபோதிலும், வடகொரியாவில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நுழையாமல் இருக்கிறது என அந்த நாடு அதிபரால் கூறப்பட்டு வந்தது. அங்கு எல்லைகள் மூடப்பட்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. ஒரு காரணமாக கருதப்படுகிறது. இருந்தாலும், அங்கு கொரொனா இல்லை என்பது உலகநாடுகளால் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், அங்கு கடந்த 12-ந்தேதி, தங்கள் நாட்டில் கொரோனா நுழைந்து விட்டதாக வடகொரியா வெளிப்படையாக அறிவித்தது. ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’தொற்று உறுதிசெய்யப்பட்டது. அப்போதிருந்து காய்ச்சல் பாதிப்பும், உயிரிழப்புகளும் அந்நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

நேற்று மேலும் 8 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலி எண்ணிக்கை 50ஆகஉயர்ந்தது. ஒரேநாளில், 3லட்சத்து 92 ஆயிரத்து 920பேருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது. மேலும் இதுவரை 12லட்சம் பேர் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் உயிரிழப்புகளில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்ற விவரத்தை வடகொரியா இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனதுகட்சியின் அரசியல் விவகாரகுழு கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் கலந்துகொண்டார். அப்போது,அவர் அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

அரசு கையிருப்பில் உள்ள மருந்துகளை மருந்தகங்களுக்கு உடனடியாக அனுப்புமாறும், மருந்தகங்கள் 24மணி நேரமும் செயல்படவேண்டும் என்றும் அரசியல் விவகாரகுழு ஏற்கனவே உத்தரவுபிறப்பித்து இருந்தது.

ஆனால் அந்த உத்தரவை சுகாதார அதிகாரிகள் பின்பற்றவில்லை.அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டனர். கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் திறம்பட ஈடுபடவில்லை. ஆகவே, எனது ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்