Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்!!

Sekar November 05, 2022 & 10:39 [IST]
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்!!Representative Image.

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி தனது 106வது வயதில் இன்று அதிகாலை காலமானார். 

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூரில் வசித்து வந்த நேகி, வரவிருக்கும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக நவம்பர் 2 ஆம் தேதி தபால் மூலம் வாக்களித்தார். அறிக்கைகளின்படி, அந்த நேரத்தில் 106 வயதான அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 

இந்நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாகவும், அரசு தரப்பில் அவரை மரியாதையுடன் வழியனுப்பி வைக்கும் வகையில் இசைக்குழுவினர் ஏற்பாடு செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கின்னவுர் அபித் உசேன் தெரிவித்துள்ளார்.

ஜூலை 1, 1917 இல் பிறந்த நேகி கல்பாவில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1947 இல் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு 1951 இல் இந்தியா தனது முதல் பொதுத் தேர்தலை நடத்தியபோது, ​​அக்டோபர் 25 அன்று நேகி முதலில் வாக்களித்தார். 

அந்த முதல் தேர்தலுக்கான பெரும்பாலான வாக்குப்பதிவு பிப்ரவரி 1952 இல் நடந்தாலும், ஹிமாச்சலில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால் ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும் அந்த காலகட்டத்தில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். 

அந்த சமயத்தில் நேகி தான் முதன்முதலில் வாக்கை பதிவு செய்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் வாக்காளர் என அறியப்படும் ஷியாம் சரண் நேகி சனம் ரே என்ற இந்திப் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்