Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புதிய எஸ்400ஏவுகணையை வாங்கும் இந்தியா..அமெரிக்க பாதுகாப்பு துறை விளக்கம்.!

madhankumar May 19, 2022 & 07:19 [IST]
புதிய எஸ்400ஏவுகணையை வாங்கும் இந்தியா..அமெரிக்க பாதுகாப்பு துறை விளக்கம்.!Representative Image.

பாகிஸ்தான், சீன ஆகியநாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்து கொள்ள இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணையை வாங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு துறை அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் அடங்கிய ராணுவ சேவைகள் குழுவின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அந்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் கலந்துகொண்டு பேசியதாவது:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான் ஆதரவு பெட்ரா அமைப்புகள் தங்கள் மீதஹான தாக்குதலை அதிகரிக்கும் என்று வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே 2003 போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியும் பாகிஸ்தான் படைகள் எல்லையில் அவ்வவ்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. இதுபோல, கடந்த 2020-ல் லடாக் எல்லையில் சீன ராணுவமும் அத்துமீறி நுழைய முயன்றது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. இதனால் இந்தியா-சீனா இடை யிலான உறவு சீர்குலைந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவே ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாங்கியது. தற்போது இதனை இந்திய பாதுகாப்பு படையில் இணைப்பதற்கான வேலைகள் நடந்துவருகின்றன.மேலும் இந்திய தனது படைகளை வலுப்படுத்த முப்படைகளையும் இணைத்து பயிற்சியில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தரைப்படை, வான்வெளி படை கடற்படை ஆகியவையே இணைத்து போர் பயிற்சியில் ஈடுப்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்