Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈரானோடு அந்த விஷயம் பேசப்பட்டதா..? மறுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம்!!

Sekar June 09, 2022 & 19:12 [IST]
ஈரானோடு அந்த விஷயம் பேசப்பட்டதா..? மறுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம்!!Representative Image.

தற்போது இந்தியாவிற்கு வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர், இந்தியா-ஈரான் இருதரப்பு சந்திப்பின் போது, நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக இருதரப்பு விவாதத்தில் எதுவும் பேசப்படாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாஜகவால் இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகத்திற்கு எதிராக பேசிய கருத்துக்கள் சர்ச்சையானது. இது தொடர்பாக இந்திய தூதர்களை வரவழைத்து ஈரான், குவைத் மற்றும் கத்தார் தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தது.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அரபு நாடுகளில் வேதனையை ஏற்படுத்திய பிறகு, இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை.

இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் நேற்று வர்த்தகம், இணைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பெரிய அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். நபிகள் நாயகத்தின் மீதான அவமரியாதை கருத்துக்களால் உருவான எதிர்மறையான சூழ்நிலையின் பிரச்சினையை அப்துல்லாஹியன் எழுப்பியதாகவும், இஸ்லாத்தின் நிறுவனர் மீதான இந்திய அரசாங்கத்தின் மரியாதையை இந்தியத் தரப்பு மீண்டும் வலியுறுத்தியதாகவும் ஈரான் தரப்பு கூறியது.

எனினும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அவற்றை இன்று நிராகரித்தார். இந்த பிரச்சினை வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கும் அவரது ஈரானிய பிரதிநிதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எழுப்பப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஈரானிய அமைச்சர் மேலும் ட்வீட் செய்து, பேச்சுவார்த்தை குறித்து ட்வீட் செய்துள்ளார். "எங்கள் இருதரப்பு மூலோபாய பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக பிரதமர் மோடி, எஃப்எம் ஜெய்சங்கர் மற்றும் பிற இந்திய அதிகாரிகளை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெஹ்ரானும் புது டெல்லியும் தெய்வீக மதங்கள் மற்றும் இஸ்லாமிய புனிதங்களை மதிக்க வேண்டும் மற்றும் பிரிவினைகளை தவிர்க்க வேண்டும். உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அமைச்சர் கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் வெளியான செய்திகளில், இந்திய மக்களையும் அரசாங்கத்தையும் மதங்களுக்கு, குறிப்பாக நபிக்கு மரியாதை அளித்ததற்காக அப்துல்லாஹியன் பாராட்டியதாக தெரிவித்துள்ளது. 

மேலும் இந்தியத் தரப்பு தனது பதிலில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் இந்தியாவில் பல்வேறு மதங்களின் சகவாழ்வைக் குறிப்பிட்டு, பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு இடையிலான வரலாற்று நட்பைக் குறிப்பிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்