Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

38ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மின் தட்டுப்பாடு ஏற்படும்...அதிகாரிகள் எச்சரிக்கை..!

madhankumar May 20, 2022 & 08:30 [IST]
38ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மின் தட்டுப்பாடு ஏற்படும்...அதிகாரிகள் எச்சரிக்கை..!Representative Image.

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இதே நிலை தொடர்ந்தால், கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மின்வெட்டு தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோடை வெப்பம் வழக்கத்தி விட இந்த ஆண்டு சுட்டெரித்து வருவதால், கடும் வெயில் வாட்டி வருகிறது. வெப்பத்தை தணித்து கொள்ள மின்விசிறி, ஏர் கண்டிஷனர் உள்ளிட்ட மின் உபகரணங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் மின்சார பயன்பாடு அதிகரித்து, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின் தேவை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கு வெப்ப அலையால் மின் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்சியே  காரணம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில், பலரும் வீட்டிலிருந்து பணியாற்றியதால், பகல் வேளைகளில் மின்தேவை அதிகரித்ததாகவும், இதனை ஈடுகட்ட தேவையான மின்சாரம் சூரிய சக்தி மூலம் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

ஆனால் தற்போது கொரோனா பரவலுக்கு பிறகு பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படுவதால், சோலார் பேனல் கொண்டு மின்சாரம் உருவாக்க முடியவில்லை. மேலும் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின்சாரம் தயாரிப்பதில் பிரச்னை ஏற்படுத்தலத்து என கூறப்பட்டுள்ளது. மேலும் 80 சதவீதம் நிலக்கரியை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தாலும் அதனை ரயில்வேதுறையால் விரைந்து விநியோகிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலை காரணமாக வரும் நாட்களில் மேலும் பல மின்தடை நிலையை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் எனவும், மின்பற்றாக்குறை நிலை 38 ஆண்டுகளில் இல்லாத நிலையை எட்டும் எனவும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்