Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மூட்டை மூட்டையாக.. அம்மாடியோவ்.. 700 கிலோ போதைப்பொருள்.. ₹1,400 கோடி மதிப்பு!! சிக்கியது எப்படி?

Sekar August 04, 2022 & 15:07 [IST]
மூட்டை மூட்டையாக.. அம்மாடியோவ்.. 700 கிலோ போதைப்பொருள்.. ₹1,400 கோடி மதிப்பு!! சிக்கியது எப்படி?Representative Image.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நலசோபராவில் உள்ள போதைப்பொருள் தயாரிப்பு பிரிவில் மும்பை போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1,400 கோடி மதிப்புள்ள 700 கிலோ மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது 5 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரித்து, பின்னர் தங்கள் ஏஜென்ட்கள் மூலம் வெளிச்சந்தையில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தனர் என்றனர்.

"குறிப்பிட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அந்த வளாகத்தில் சோதனை நடத்தியது. அப்போது தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான மெபெட்ரோன் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது." என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் நலசோபராவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக மும்பை காவல்துறை நடத்திய போதைப்பொருள் ரெய்டுகளில் இது மிகப்பெரியதாகும். மெபெட்ரோன், மியாவ் மியாவ் அல்லது எம்.டி என்றும் அழைக்கப்படுகிறது. இது செயற்கையாக தயாரிக்கப்படும் ஒரு தூண்டுதலாகும். இது போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட சைக்கோட்ரோபிக் பொருளாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்