Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாங்கள் அடிமைகள்...ஆனால் இந்தியா..? இம்ரான்கான் ஆவேசம்..!

Bala May 30, 2022 & 13:06 [IST]
நாங்கள் அடிமைகள்...ஆனால் இந்தியா..? இம்ரான்கான் ஆவேசம்..!Representative Image.

பாகிஸ்தானில் உள்ள ஷேகாபாத், சார்சடாவில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது; அமெரிக்கா அடிமைகள் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளனர். அதே நேரத்தில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மலிவான விலையில் எண்ணெய் வாங்கி விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைத்துள்ளதாக கூறினார். 

மேலும், இந்தியா சுதந்திரமானது ஆனால் நாங்கள் (பாகிஸ்தானியர்கள்) அடிமைகள் என்பதை இது காட்டுகிறது" என்று  தெரிவித்த அவர், "எங்கள் அரசாங்கம் ரஷ்யாவுடன் 30 சதவீத தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒரு சதித்திட்டத்தின் கீழ் எங்கள் அரசாங்கம் கலைக்கப்பட்டதாகவும், விரைவில் புரட்சி வெடிக்கும் என்றும், நாட்டிற்கு சுகந்திரமான வெளியுறவுக்கொள்கை அவசியம் என்றும் கூறினார். 

தனது கட்சியின் அமைதியான போராட்டக்காரர்களை சித்திரவதை செய்ததற்காகவும், அவர்களது வீடுகளில் சோதனை நடத்தியதற்காகவும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா ஆகியோரை நாடு மன்னிக்காது என்றும் அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு விரையில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என  எச்சரித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்