Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோஹினூர் வைரத்தை மீட்க இந்தியாவின் முயற்சி..! முழு விவரங்களும் இங்கே…

Gowthami Subramani Updated:
கோஹினூர் வைரத்தை மீட்க இந்தியாவின் முயற்சி..! முழு விவரங்களும் இங்கே…Representative Image.

இங்கிலாந்தில் இருந்து கோஹினூர் வைரம் உட்பட பல்வேறு கலைப்பொருள்களை மீட்டெடுக்க இந்தியா பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 08 ஆம் நாள் இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து கோஹினூர் வைரம் யார் பெறப்போகிறார் என்பதில் சர்ச்சை ஆனது. இந்நிலையில், பிரிட்டிஷ் அருங்காட்சியங்களில் உள்ள பொருள்களை, கோஹினூர் வைரம் உட்பட, அரச குடும்பத்தின் வசம் உள்ள பொருள்களைத் திருப்பி அனுப்புவதற்கு இந்திய அரசு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் ஆனது, பிரதமர் மோடி அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுக்களில், இந்த பொருள்களை மீட்டெடுப்பதற்கான பேச்சும் அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையானது, சுதந்திரத்திற்குப் பின் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொருள்களை மீட்பதற்கான முயற்சிகள் இருப்பினும், அதிகாரிகள் லண்டனில் உள்ள முக்கிய நபர்களிடம் ஒருங்கிணைத்து, போரில் கொள்ளையடிக்கப்பட்டவை என கைப்பற்றப்பட்ட தொல்பொருள்களை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு முறையான கோரிக்கைகளை முன்வைப்பதாக நம்பப்படுகிறது.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி, அரசாங்கத்திற்கு இது முக்கியமானது எனவும், இந்தியாவின் கலைப்பொருள்களை திருப்பி அனுப்புவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட அர்ப்பணிப்பிலிருந்து முயற்சி எடுத்து வருவதாகவும், அவர் அதை ஒரு முக்கியமான முன்னுரிமையாக எடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. மேலும், தென்னிந்திய கோவில்களில் இருந்து எடுக்கப்பட்ட வெண்கல சிலை தொடர்பாக ஆக்ஸ்போர்டின் அஷ்மோலியன் அருங்காட்சியம் ஏற்கனவே அணுகப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புது டெல்லியில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, நாட்டிற்கு வெளியே உள்ள கலைப்பொருள்களைத் திரும்பப் பெறுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்