Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தலிபானைகளைப் போல்.. திரைச்சீலையிட்டு வகுப்புகள்.. கேரளாவை உலுக்கிய சம்பவம்!!

Sekar July 08, 2022 & 19:05 [IST]
தலிபானைகளைப் போல்.. திரைச்சீலையிட்டு வகுப்புகள்.. கேரளாவை உலுக்கிய சம்பவம்!!Representative Image.

கேரளாவில் இஸ்லாமிய அமைப்பினர் ஆண், பெண் மாணவர்களை தலிபான்களை போல் திரைச்சீலையால் பிரித்து தனித்தனியாக உட்கார வைத்து மருத்துவ மாணவர்களில் ஒரு பகுதியினருக்கு பாலின அரசியல் குறித்த வகுப்புகளை நடத்துவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள சாஸ்த்ர சாகித்ய பரிஷத், கேரள ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் பலர் இப்படி பாகுபாடு காட்டப்படுவதை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

முஜாஹித் விஸ்டம் இஸ்லாமிய அமைப்பு எனும் இஸ்லாமியக் குழு "LGBTQIA : வானவில் கொடிகளுக்குப் பின்னால்: LGBTQIA ஐ இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வது" என்ற தலைப்பில் வகுப்புகள் நடத்தி வருகிறது. அந்த வகுப்புகளில் தான் இந்த பாகுபாடு காட்டப்படுவதாகத் தெரிகிறது.

வகுப்பை நடத்திய குழுவின் அலுவலக அதிகாரி ஒருவர் சமூக ஊடகங்களில் புகைப்படத்தை வெளியிட்ட பிறகு இது வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கு கடும் விமர்சனங்கள் வந்த நிலையில், வகுப்புகளை நியாயப்படுத்திய அந்த அதிகாரி, அவை தனியார் இடத்தில் நடத்தப்பட்டதாகக் கூறினார்.

இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் அனுஸ்ரீ கூறுகையில், அதிகம் படித்த மாணவர்கள் இதுபோன்ற வகுப்புகளில் பங்கேற்பது கவலைக்குரிய விஷயம் என்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பு இதை ஒரு பெரிய சவாலாகக் கருதுகிறது என்றும் கூறினார்.

மாநிலத்தின் முற்போக்கு மக்கள் அறிவியல் இயக்கமான கேரள சாஸ்த்ர சாகித்ய பரிஷத், வகுப்புகளைக் கண்டித்து, திரைச்சீலை எதற்கு என்று ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை என்று விளாசியுள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி, “மதம் என்பது தனிப்பட்ட விஷயம். மதத்தைப் பின்பற்றும் ஒரு பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வகுப்புகளுடன் கல்லூரிக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை. மத வழிபாட்டுத் தலங்களில் வகுப்புகள் நடப்பதாகப் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது கண்டிக்கத்தக்கது. 

இதுபோன்ற வகுப்புகளை நடத்துவதில் கல்லூரி நிர்வாகத்திற்கோ அல்லது கல்லூரி யூனியனுக்கோ எந்தப் பங்கும் இல்லை. இதுபோன்ற செயல்களை கல்லூரி ஊக்குவிப்பதில்லை. நாங்கள் எப்போதும் முற்போக்கு சிந்தனையுடன் நிற்கிறோம்." என்று கூறியுள்ளது.

காங்கிரசின் மாணவர் பிரிவான கேரள மாணவர் சங்கத்தின் (KSU), மாநிலத் தலைவர் கேஎம் அபிஜித்திடம் கேட்டதற்கு, இந்த விஷயத்தை அவர் இன்னும் ஆய்வு செய்யவில்லை என்றும், பின்னர் அது குறித்து பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்