Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியா உரங்களை அனுப்பும் இந்தியா..!

madhankumar May 15, 2022 & 10:21 [IST]
இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியா உரங்களை அனுப்பும் இந்தியா..!Representative Image.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு 65ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை அனுப்ப இந்திய திட்டமிட்டுள்ளதற்கு, இலங்கை தூதர் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள 2.2 கோடி மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்கின்றனர். இலங்கை ஆண்டுதோறும் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள உரங்களை இறக்குமதி செய்து வந்தது. மேலும் கடந்த ஆண்டு ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக ரசாயன உரங்களை தடை செய்தது.

இலங்கையில் கடும் பொருளாதார நிலைக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுவது போதிய அளவு ஆர்கானிக் உரங்கள் கிடைக்காததும்,, மோசமான வானிலையால், தேயிலை, நெல் போன்ற பயிர்களின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டதே என கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள இலங்கை தூதர் மிலிண்டா மரகோடா, உரத்துறை செயலாளர் சதுர்வேதியை கடந்த வியாழக்கிழமை சந்தித்து பேசினார். அப்போது இலங்கையில் நடப்பு பருவ விவசாயத்துக்கு யூரியா விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளதாக இலங்கை தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு உரத்துறை செயலாளர் சதுர்வேதிக்கு இலங்கை தூதர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சதுர்வேதி கூறுகையில், ‘‘அண்டை நாடுகளுக்கு முதல் முன்னுரிமை என்பதை இந்தியா தனது கொள்கையாக கொண்டுள்ளது. இலங்கைக்கு தேவையான உரத்தை அனுப்ப கப்பலை ஏற்பாடு செய்யும் பணியில் உரத்துறை ஈடுபட்டுள்ளது.

தற்போது உள்ள திட்டத்தின் கீழும் அதற்கு மேலும் உரங்களை விநியோகம் செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளதாக சதுர்வேதி கூறியுள்ளார். இலங்கைக்கு இந்தாண்டு ஜனவரி முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் கடன்கள், கடன் திட்டத்தின் கீழ் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதாக இந்தியா உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்