Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஷார்ஜா-ஹைதராபாத் விமானம் திடீரென கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது ஏன்..? காரணம் இது தான்..!!

Sekar July 17, 2022 & 09:55 [IST]
ஷார்ஜா-ஹைதராபாத் விமானம் திடீரென கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது ஏன்..? காரணம் இது தான்..!!Representative Image.

ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம் திடீரென பாகிஸ்தானின் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது பரபரப்ப்பை ஏற்படுத்தியது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இண்டிகோ விமானம் ஹைதராபாத் வந்து கொண்டிருந்தது. வரும் வழியில் நடுவானில் திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக, அருகிலிருந்த பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டது.

தற்போது இந்த குறைபாடு குறித்து கராச்சி விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கராச்சிக்கு வேறொரு விமானத்தை அனுப்பி பயணிகளை திரும்ப அழைத்து வர இண்டிகோ முடிவு செய்துள்ளது.

கடந்த 2 வாரங்களில் கராச்சியில் தரையிறங்கும் இரண்டாவது இந்திய விமான நிறுவனம் இதுவாகும். முன்னதாக ஜூலை 5 ஆம் தேதி, ஸ்பைஸ்ஜெட்டின் டெல்லி-துபாய் விமானம் எரிபொருள் காட்டி பழுதடைந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. 

மனிதாபிமான அடிப்படையில் இந்திய விமானத்தை ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க பாகிஸ்தான் சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் அனுமதித்ததை அடுத்து, Boeing 737 Max விமானம் கராச்சி விமான நிலையத்தில் காலை 9:15 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்