Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரியல் லைஃப் ராக்கி பாய்-ஆக நினைத்த சிறுவன்...மருத்துவமனையில் அனுமதி..!

madhankumar May 28, 2022 & 16:19 [IST]
ரியல் லைஃப் ராக்கி பாய்-ஆக நினைத்த சிறுவன்...மருத்துவமனையில் அனுமதி..!Representative Image.

கேஜிஎஃப் 2 ராக்கி பாய் கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பின் காரணமாக ஒரு பாக்கெட் சிகரெட்டை ஒரே நேரத்தில் புகைத்து தள்ளிய சிறுவன் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை அவனது பெற்றோர்கள் உயிருக்கு போராடும் நிலையில் அங்குள்ள அரசு செஞ்சுரி மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அந்த சிறுவன் மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்பட்டான். இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அந்த சிறுவன் தீவிர சிகிச்சைக்கு பின்னர் ஓரளவிற்கு தேறினான்.

இதனையடுத்து எதனால் உனக்கு இப்படி ஆனது என அந்த சிறுவனிடம் மருத்துவர்கள் கேட்டுள்ளனர். முதலில் எனக்கு தெரியாது என கூறி மழுப்பிய அவன் பின்னர் பெற்றோரிடம் கூறிவிடாதீர்கள் என கூறி உண்மையை கூறியுள்ளான். இதனை கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை போலும்.

சிறுவன் கூறியதாவது: நான் சமீபத்தில் தான் கேஜிஎப்2 படம் பார்த்தேன், அதின் படத்தின் நாயகனான யஷ் (ராக்கி) மிகவும் கெத்தாக இருப்பார். அவரை பார்த்தாலே அனைவரும் நடுங்குவார்கள். தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே அவன் உருவாக்குவான், அவனை போலவே நானும் மாறவேண்டும் கெத்தாக இருக்கவேண்டும் என எண்ணினேன்.

மேலும் படத்தில் பல காட்சிகளில் ராக்கி பாய் தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவராக இருப்பார், எனவே நாமும் அவ்வாறு இருந்தால் தான் அனைவரும் நம்மை கண்டு பயம் கொள்வார்கள் என நினைத்தேன். அதனால் ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி ஒரே நேரத்தில் அனைத்தையும் பிடித்து முடித்தேன் என கூறியுள்ளான்.

முதன் முறையாக சிகரெட் பிடித்ததால் ஒத்துக்கொள்ளாமல் நடு இரவில் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அவனது பெற்றோர் தூக்கி வந்துள்ளனர். தற்போது அந்த சிறுவன் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். திரைப்படங்களை பொழுதுபோக்காக பார்க்காமல் அதனை உண்மை என நம்பும் இளம் தலைமுறையினர் அதிகரித்து வருவதாகவும், அதனால் சமூகத்தில் பல பிரச்னைகள் ஏற்படுவதாகவும் மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்