Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்நாடகாவில் எழுந்த மொழிப்பிரச்சனை...திருமண விழாவில் அடிதடி...!

madhankumar May 28, 2022 & 15:29 [IST]
கர்நாடகாவில் எழுந்த மொழிப்பிரச்சனை...திருமண விழாவில் அடிதடி...!Representative Image.

மகாராஷ்டிரா மாநில எல்லையில் அமைந்துள்ளது கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டம். இந்த மாவட்டத்தில் திருமண விழாவில் போடப்பட்ட கன்னட பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிரா ஏகிகரண் சமிதி எனும் கட்சியினர் திருமண ஊர்வலம் சென்றவர்கள் மீது கொடூர தாக்குதல் நடந்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவி மாவட்டம் தாமனி கிராமத்தை சேர்ந்தவர் சித்து சாய்பன்னாவர். இவருக்கும் ரேஷ்மா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது அன்று இரவு மணமக்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அந்த ஊர்வலத்தில் கன்னட பாடல்கள் ஒழிக்கப்பட்டு ஆடிப்பாடி கொண்டாடி சென்றனர். இந்த ஊர்வலம் சன்னம்மா நகர் அருகே சென்றது. அப்போது மகாராஷ்டிரா எகிகரண் சமிதி (எம்இஎஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் ஊர்வலத்தை மறித்தனர்.

அப்போது அவர்கள் கன்னட பாடல்கள் ஒழுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு நிற்காமல் ஊர்வலத்தின் முன்னர் ஆடியவர்களை கொடூரமாக தாக்கினர், பின்னர் காரில் அமர்ந்திருந்த மணமகன் சிந்துவையும் தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதனால் காயமடைந்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே கன்னட பாடல்கள் பாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை கண்டித்து நிப்பானி போலீஸ் நிலையம் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்இஎஸ் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து, நிப்பானி போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்இஎஸ் கட்சியை சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை-யிடம் கேட்டபோது அவர் எம்இஎஸ் கட்சியை சேர்ந்தவர்கள் செயல் கண்டிக்கத்தக்கது, ஏற்கனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக மக்களுக்கு ஏற்படும் துன்பத்தை பார்த்துக்கொண்டு ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்