Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

International Plastic Bag Free Day 2022 : சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்.. வரலாறும் முக்கியத்துவமும்!!

Sekar July 03, 2022 & 09:08 [IST]
International Plastic Bag Free Day 2022 : சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்.. வரலாறும் முக்கியத்துவமும்!!Representative Image.

International Plastic Bag Free Day 2022 : ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய நாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜூலை 3ம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

ஒரு முறை பயன்படுத்திய பின் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களால் சூழல் மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியா கடந்த ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகளுக்கு கடுமையான தடை விதித்துள்ளது. 

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் பிளாஸ்டிக் பைகள், ஸ்ட்ராக்கள், காபி கிளறிகள், சோடா மற்றும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பெரும்பாலான உணவு பேக்கேஜிங் ஆகியவை அடங்கும்.

சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளின் வரலாறு

சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் என்பது பேக் ஃப்ரீ வேர்ல்டின் ஒரு முயற்சியாகும். 1997 ஆம் ஆண்டு கடலில் கிரேட் பிளாஸ்டிக் பேட்ச் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு, உலகெங்கிலும் உள்ள மக்கள் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விவாதிக்கத் தொடங்கினர்.

2002 ஆம் ஆண்டில், வங்காளதேசம் பிளாஸ்டிக்கை தடை செய்த முதல் நாடு ஆனது. புயல் வடிகால்களை பிளாஸ்டிக்குகள் அடைத்து, வெள்ளத்தை மோசமாக்குகிறது என்று எடுத்துக்காட்டப்பட்டதை அடுத்து, வங்கதேசம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடையை விதித்தது. பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதும் நாட்டில் தண்ணீர் தேங்குவதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினத்தின் முக்கியத்துவம்

சர்வதேச பிளாஸ்டிக் பையில்லா தினத்தின் முக்கிய நோக்கம், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்துவதால் நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் நமது நீர்நிலைகள் மாசுபடுகின்றன. ஆறுகள், பெருங்கடல்கள் மற்றும் கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மனிதர்களால் நீர்நிலைகளில் வீசப்படும் மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்பதால் பல நீர்வாழ் விலங்குகள் இறக்கின்றன.

மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறார்கள், அவற்றில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்ய முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகளவில் 10-13% பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மேலும், பிளாஸ்டிக் மறுசுழற்சி செயல்முறை சிக்கலானது.

இந்தியா, வங்கதேசம், சீனா, ருவாண்டா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் தற்போது பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்