Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்ன...நான் அரசியலுக்குள் நுழையுறேனா..? நடிகர் விஷால் விளக்கம்..!

madhankumar July 02, 2022 & 19:58 [IST]
என்ன...நான் அரசியலுக்குள் நுழையுறேனா..? நடிகர் விஷால் விளக்கம்..!Representative Image.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மிக பிரபலமானவர்தான் நடிகர் விஷால், இவர் தற்போது "லத்தி" படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்நிலையில் நடிகர் விஷால் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து அவரது தொகுதியில் ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அந்த செய்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அந்த பதிவில், "நான் இதை முற்றிலும் மறுக்கிறேன். இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இது தொடர்பாக என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமே நடிப்பது எனது எண்ணம். அரசியலில் ஈடுபடுவதோ அல்லது சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடுவதோ எனது எண்ணம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்