Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாலை விபத்தில் போதையில் உடன் பயணிப்பவர்களும் குற்றவாளிகள் தான்..!

madhankumar August 06, 2022 & 12:32 [IST]
சாலை விபத்தில் போதையில் உடன் பயணிப்பவர்களும் குற்றவாளிகள் தான்..!Representative Image.

வாகன ஓட்டிகள் குடி போதையில் வாகனத்தை ஓட்டி ஏற்படுத்து விபத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடன் பயணிப்பவர்களும் குற்றவாளிகளே என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெரும்பாலான சாலை விபத்துகள் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வருபவர்களாலேயே நிகழ்கிறது. அப்போது அவர்களுடன் உடன் பயணிப்பவர்கள் தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல் வழக்குகளில் இருந்தும் தண்டனையில் இருந்தும் தப்பித்துவிடுகின்றனர். சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடந்த பயங்கர விபத்தில் இரண்டு மீனவர்கள் மற்றும் 1 காவலர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சூர்யா, அவரது நண்பர் செபாஸ்டியன் ஆகியோர் கல்லூரி மாணவர்கள். மேலும் செபாஸ்டியனின் சகோதரி டாக்டர் லட்சுமி ஆகியோர் காரில் பயணித்துள்ளனர்.  அதிவேகமாக காரை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த சூர்யா, மெரினா கடற்கரை முன்புள்ள காமராஜர் சாலைக்குள் சென்றது. அப்போது அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த, 2 மீனவர்கள், ஒரு போலீஸ்காரர் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் பலியானார்கள். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இந்த கொடூர விபத்தால் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன.

இது குறித்து வழக்கு பதிவு செய்த சென்னை அண்ணா சதுக்கம் போலீசார் நடத்திய விசாரணையில்,  காரை ஓட்டிய சூர்யா குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டிய சூர்யா உள்ளிட்ட 3 பேர் மீதும் குற்றம் சாட்டி, குற்றப்பத்திரிகையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டாக்டர் லட்சுமி, ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அதில் நான் காரில் பயணம் செய்தேனே தவிர மது அருந்தவில்லை, என கூறியிருந்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறும்போது, ‘‘தனது சகோதரர் குடிபோதையில் காரை ஓட்டுவதை தடுக்காமல் குற்றத்துக்கு மனுதாரர் உடந்தையாக செயல்பட்டு இருக்கிறார். அதனால் அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது’’ என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும்போது அவர்கள் உடன் பயணம் செய்தவர்களும் குற்றவாளிகளே என தீர்ப்பளித்து டாக்டர் லட்சுமியின் மனுவை தள்ளுபடி செய்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்