Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உத்தரவை மதிக்காத பெண் தாசில்தார்.. தண்டனையை அறிவித்தது நீதிமன்றம்!!

Sekar August 06, 2022 & 11:50 [IST]
உத்தரவை மதிக்காத பெண் தாசில்தார்.. தண்டனையை அறிவித்தது நீதிமன்றம்!!Representative Image.

ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாத பெண் தாசில்தாரை குற்றவாளி என சமீபத்தில் அறிவித்து, தண்டனை விபரம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், தாசில்தாருக்கு நேற்று தண்டனை வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்காவில் உள்ள கடலாடி எனும் கிராமத்தில் பொதுப்பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்ததால், அதை அகற்றக் கோரி முருகன் என்பவர் 2017ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்பை 12 வாரங்களுக்குள் அகற்ற அப்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றாததால் முருகன் மீண்டும் 2018இல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆக்கிரமிப்பை அகற்ற ஒரு மாதம் அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எனினும் அரசு தரப்பில் கூறியபடி ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இது மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 2 அரசுத் தரப்பில் இரண்டு நாட்கள் அவகாசமே கோரப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று தெரிவித்த நீதிமன்றம், 2018இல் அப்போது தாசில்தாராக இருந்து உத்தரவை அமல்படுத்ததால் தாசில்தார் லலிதாவை குற்றாவாளி என அறிவித்தது.

அவர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும், அப்போது தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான தாசில்தார் லலிதா உத்தரவை அமல்படுத்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குறைந்தபட்ச தண்டனையாக நேற்று முழுவதும் நீதிமன்றத்திலேயே இருக்கும்படி உத்தரவிட்டனர். மேலும் அரசு மூன்று வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதியளித்ததால், மூன்று வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என  அரசுக்கு உத்தரவிட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்