Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விதிமுறையை நீங்களே மீறலாமா...மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி..!

madhankumar August 03, 2022 & 11:28 [IST]
விதிமுறையை நீங்களே மீறலாமா...மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி..!Representative Image.

நாடாளுமன்றத்தில் "முதலைக்கண்ணீர்" என்ற வார்த்தையை பயன்படுத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர், எம்.பிக்கள் அவையில் சில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என அந்த வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டிருந்தது. 

அதில் ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், நாடகம், கபட நாடகம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, முதலைக்கண்ணீர் உள்ளிட்ட வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி பயன்படுத்தினார் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

 

“ முதலைக்கண்ணீர்” என்ற சொல் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் நேற்று பேசிய @nsitharaman இந்த சொல்லை அழுத்தந்திருத்தமாக பயன்படுத்தினார்.

என்ன செய்யப்போகிறீர்கள் @ombirlakota pic.twitter.com/VTXPqpeiyF

— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 2, 2022

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ’பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு அரசு குறைக்காதது முதலைக் கண்ணீர் வடித்த கதை’ என பேசியுள்ளார். இதனையடுத்து அவையில் தடை செய்யப்பட்ட வார்த்தையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டும் எப்படி பயன்படுத்தலாம் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில், “முதலைக்கண்ணீர்” என்ற சொல் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழுத்தம்திருத்தமாக பயன்படுத்தினார், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் சபாநாயகர் ஓம் பிர்லா" என கேள்வி எழுப்பியுள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்