Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இனி குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000?

Sekar May 24, 2022 & 19:23 [IST]
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இனி குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000? Representative Image.

ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் மத்திய அரசு ஊழியர்களின் முடிவில்லாத காத்திருப்பு நாளை முடிவுக்கு வரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக உயரும்.

ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவதற்கு அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்கக்கூடும் என்று பல ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000 ஆக உயர்த்தி ரூ.26,000 ஆகவும், ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டால், அதன் விளைவாக அவர்களின் சம்பளம் உயரும். உண்மையில், ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்புடன், குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிக்கும். பணியாளர்கள் தற்போது 2.57 சதவீதம் என்ற அடிப்படையில் ஃபிட்மென்ட் காரணியின் கீழ் சம்பளம் பெறுகின்றனர். 

இது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,000 உயரும். அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் தற்போதுள்ள ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும். மேலும் ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களுக்கும் தங்களது பனிக்காலத்தை பொறுத்து ஊதியம் அதிகரிக்கும்.

முன்னதாக, மத்திய அமைச்சரவை ஜூன் 2017 இல் 34 மாற்றங்களுடன் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் தொடக்க நிலை அடிப்படை ஊதியத்திற்கு வழங்கப்படும் புதிய ஊதிய விகிதங்கள் மாதத்திற்கு ரூ.7,000லிருந்து ரூ.18,000 ஆகவும், உயர்நிலையில் அதாவது செயலர் பதவியில் உள்ளவர்களுக்கு ரூ.90,000லிருந்து ரூ.2.5 லட்சமாகவும் உயர்ந்தது. வகுப்பு 1 அதிகாரிகளுக்கு, ஆரம்ப சம்பளம் ரூ.56,100 ஆக இருந்தது.

இந்நிலையில், நாளை நடக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தொடக்க நிலை அடிப்படை ஊதியமாக ரூ.26,000 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இது ஜாக் பாட் தான்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்