Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் அரசியலில் களமிறங்கும் விஷால்...இந்த முறை எங்கன்னு தெரியுமா?

madhankumar June 29, 2022 & 16:57 [IST]
மீண்டும் அரசியலில் களமிறங்கும் விஷால்...இந்த முறை எங்கன்னு தெரியுமா?Representative Image.

நடிகர் விஷால் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் RK நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் சில காரங்களுக்காக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து நடந்த நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

தற்போது சினிமாவில் பிசியாக நடித்துவரும் நடிகர் விஷால் மீண்டும் அரசியலில் குதிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முறை தமிழகத்தில் அல்ல ஆந்திராவில். அங்கு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. ஆந்திராவில் கடந்த 2019ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஜெகன் மோகன் ஆட்சியை கைப்பற்றினார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. மேலும் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வெறும் 1 தொகுதியை மற்றும் கைப்பற்றியது, அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.

கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் 2014 இல் நடக்கவிருக்கும் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என தற்போதிருந்து அவர் வியூகம் வகுத்து வருகிறார். கடந்த முறை வென்றதை விட அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என எண்ணி வருகினார். மேலும் சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான குப்பம் தொகுதியில் வலுவான வேட்பாளரை நிற்க வைக்க வேண்டும் என்று எண்ணிய ஜெகன் மோகன் ரெட்டி அதற்காக நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆந்திராவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

நடிகர் விஷாலை தேர்வு செய்வதற்கான காரணம்:

சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான குப்பம் தொகுதி கர்நாடக மற்றும் தமிழக எல்லையான சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் கே.ஜி.எஃப் லிருந்து வெறும் 22 கிலோமீட்டர் மட்டுமே அதே போல் சித்தூரிலிருந்து தமிழக எல்லையான காட்பாடி வெறும் 30 கிலோமீட்டர் மட்டுமே ஆகும். இந்த பகுதியில் தமிழக பகுதியில் இருந்து வேலைக்கு சென்று அங்கு குடியேறியவர்கள் வாக்குகளை அதிகமாக கொண்டுள்ளது. இதனால் தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சியமான முகத்தினை தேர்வு செய்ய வேண்டும் என  ஆலோசனை நடத்தியபோது புங்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வும் மாநில அமைச்சருமான பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி நடிகர் விஷால் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

நடிகர் விஷாலை தேர்வு செய்யக்காரணம் ஆந்திரா மற்றும் தமிழக மக்களுக்கு தெரிந்த ஒருவர் என்பதாலும் மட்டுமல்லாமல், நடிகர் விஷால் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக அவரின் தந்தை ஜி.கே.ரெட்டியின் கிரானைட் குவாரியில் வேலை செய்துவந்தார். நடிகர் விஷாலின் தந்தை அதிகமானா கிரானைட் குவாரி நடத்தி வந்தது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், அதிலும் குறிப்பாக குப்பம் தொகுதியை மையப்படுத்தியே இருந்தது. 

பல ஆண்டுகள் விஷால் அந்த குவாரியில் வேலை செய்ததால் அப்பகுதி மக்களுக்கு அவரை நன்கு தெரியும் என்பதாலும் விஷாலுக்கு அந்த பகுதியை நன்கு தெரியும் என்பதாலும்மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விஷாலுடன் ஜெகன் மேகன் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விஷாலின் பதிலுக்கு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்