இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ஜகதீப் தன்கர் இன்று புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பதவியேற்றார்.
முன்னதாக பதவியேற்புக்கு முன்பு மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட் சென்று தனது நாளைத் தொடங்கினார்.
"பூஜ்யா பாபுவுக்கு மரியாதை செலுத்தும் போது ராஜ்காட்டின் அமைதியான கம்பீரத்தில் பாரதத்தின் சேவையில் எப்போதும் இருக்க ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், ஊக்கமளிக்கும் மற்றும் உந்துதலாகவும் உணர்ந்தேன்" என்று தன்கர் ட்வீட் செய்துள்ளார்.
இதையடுத்து ராஷ்டிரபதி பவனில் மதியம் 12.30 மணிக்கு தன்கரின் பதவியேற்பு விழா தொடங்கியது. ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜகதீப் தன்கருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…