Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தூத்துக்குடி அருகே நிலத்தடி நீரை திருடிய நான்கு லாரிகளை சிறை பிடிப்பு- பொதுமக்கள் போராட்டம்

Baskarans Updated:
தூத்துக்குடி அருகே நிலத்தடி நீரை திருடிய நான்கு லாரிகளை சிறை பிடிப்பு- பொதுமக்கள் போராட்டம் Representative Image.

தூத்துக்குடி அருகே நிலத்தடி நீரை திருடிய நான்கு லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அருகே உள்ளது கட்டாலங்குளம் கிராமம் இந்த கிராமத்தைச் சுற்றி தனி நபர்கள் 30-க்கும் மேற்பட்ட போர்வெல்லை அமைத்து நிலத்தடி நீரை முறைகேடாக திருடி விற்பனை செய்து வருகின்றனர்.இது தொடர்பாக பொதுமக்கள் தொடர் போராட்டம் காரணமாகவும், நீதிமன்ற நடவடிக்கை காரணமாகவும், மதுரை உயர்நீதிமன்றம் முறைகேடாக செயல்படும் போர்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி துணை ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டாலங்குளம் பகுதியில் முறைகேடாக செயல்பட்ட 17 போர்வெலுக்கு சீல் வைத்தனர். ஆனால் ஒரு மாதத்திற்கு பின்பு அரசு வைத்த சீல்களை போர்வெல் உரிமையாளர்கள் திருட்டுத்தனமாக எடுத்து மீண்டும் முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்து வந்தனர். இதன் காரணமாக கட்டாலங்குளம் பகுதியில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கட்டாலங்குளம் பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கட்டாலங்குளம் பகுதியில் இன்று முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சும் போர்வெல்களில் இருந்தும் தண்ணீரை எடுத்து விற்பனை செய்யும்  4 லாரிகளை சிறை பிடித்தும் முறைகேடாக செயல்படும் போர்வெல்களுக்கு சீல் வைக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த சாயர்புரம் காவல்துறையினர் கிராம மக்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலத்தடி நீரை விற்பனை செய்த நான்கு லாரிகளை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்தனர். மேலும் முறைகேடாக செயல்படும் போர்வெல் களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர் இதை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு கட்டாலங்குளம் பகுதியில் குடிநீர் பஞ்சத்தை போக்க முறைகேடாக செயல்படும் போர்வெல்களுக்கு மீண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்