Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நள்ளிரவில் தடம் புரண்ட ஜன் சதாப்தி ரயில்.. தொடரும் ரயில் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி.! | Jan Shatabdi Express Derailed

Gowthami Subramani Updated:
நள்ளிரவில் தடம் புரண்ட ஜன் சதாப்தி ரயில்.. தொடரும் ரயில் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி.! | Jan Shatabdi Express DerailedRepresentative Image.

சமீபத்தில் நடந்த ஒடிசா ரயில் விபத்தின் தாக்கம் இன்னும் முடியாத நிலையில், சென்னை பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ஜன் சதாப்தி இரயில் தடம் புரண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி கொல்கத்தா மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ற கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலத்தில், பாலசோர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இந்த பெரும் விபத்து 3 இரயில்கள் மோதியதால் ஏற்பட்டது. இந்த விபத்தில் 270-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மூன்று இரயில்கள் மோதி நடந்த இந்த பெரும் விபத்து, இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதன் தாக்கமே, இன்றும் முடிவடையாத நிலையில், மீண்டும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு விஜயவாடாவில் இருந்து ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரயில் ஆனது நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வந்தது. இதில், பயணிகளை இறக்கி விட்டு வந்த இரயில் பணிமனைக்குச் சென்ற போது ரயிலின் இரு சக்கரங்கள், தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதனால், இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த ஊழியர்கள் சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இரு சக்கரங்களையும் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்தனர். இது தொடர்பாக, இரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்