Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திடீரென கசிந்த மஞ்சள் புகை.. 13 பேர் பலியான பரிதாபம்!!

Sekar June 28, 2022 & 12:42 [IST]
திடீரென கசிந்த மஞ்சள் புகை.. 13 பேர் பலியான பரிதாபம்!!Representative Image.

ஒரு கப்பலில் குளோரின் டேங்கர்களை ஏற்றிக்கொண்டிருந்த கிரேன், தவறுதலாக இயக்கியதில் டேங்கர் வெடித்து 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜோர்டானின் அகபா துறைமுகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் சுற்றிலும் நச்சு மஞ்சள் புகை மண்டலமாக காட்சியளித்தது.

முதலில் இதை வாயு கசிவு என்று விவரித்த பொது பாதுகாப்பு இயக்குநரகம், அதிகாரிகள் காயமடைந்தவர்களை வெளியேற்றிய பின்னர் அந்த பகுதியை சீல் வைத்து நிலைமையை சரிசெய்ய நிபுணர்களை அனுப்பி வைத்தனர்.

13 பேர் கொல்லப்பட்டதாக அரசு நடத்தும் ஜோர்டான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

199 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மற்றொரு அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான அல்-மம்லகா டிவி தெரிவித்துள்ளது. மொத்தம் 251 பேர் காயமடைந்துள்ளதாக பொது பாதுகாப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் சுகாதார அதிகாரி டாக்டர். ஜமால் ஓபிதாத், மக்கள் உள்ளே இருக்கவும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடவும் வலியுறுத்தினார்.

அருகிலுள்ள குடியிருப்பு பகுதி 25 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் உள்ளது.

அகாபா செங்கடலின் வடக்கு முனையில், எல்லைக்கு அப்பால் உள்ள இஸ்ரேலிய நகரமான ஈலாட்டிற்கு அடுத்ததாக உள்ளது. இரண்டும் பிரபலமான கடற்கரை மற்றும் டைவிங் இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஈலாட்டின் அவசர சேவைகள் பிரிவு வெளியிட்ட ஒரு அறிக்கையில், அந்த நகரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், அவர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்