Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்...ஐநா எச்சரிக்கை..!

madhankumar June 27, 2022 & 15:59 [IST]
உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்...ஐநா எச்சரிக்கை..!Representative Image.

உலகம் முழுவது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார சரிவில் உலக நாடுக சிக்கியுள்ளன. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, வடகொரியா உட்பட பல நாடுகள் உணவுத்  தட்டுப்பாட்டால் பெரும் அவதிப்பட்டு வருகின்றன. இது குறித்து ஐநா எச்சரிக்கை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் உணவுத்தட்டுப்பாடு மற்றும் பருவ நிலை மாற்றத்தால் உலகம் பேரழிவை சந்திக்கும் அதில் மனிதர்கள் யாரும் தப்ப முடியாது. பருவநிலை மாற்றம், கொரோனா இவைகளால் சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இவைகளால் உலகம் முழுவதும்  கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையேயான போரால் இந்த நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. 

இதே போல் சில தினங்களில் உணவுத் தட்டுப்பாட்டால் மேலும் பல  நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்கக் கூடும். ஓரிரு ஆண்டுகளில் இந்த உணவு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கக் கூடும். ஏற்கனவே  குட்ரெஸ், ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் வேளாண் பணிகளுக்கு தேவையான உரம், எரிபொருள் விலை உயர்வுகளை  சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றன. 2023ம் ஆண்டில் உணவு பஞ்சம் தீவிரமடையும் எனவும்,  சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்