Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளக்குறிச்சியில் போர்க்கோலம்.. பள்ளியில் உச்சகட்ட பதற்றம்!!

Sekar July 17, 2022 & 12:00 [IST]
கள்ளக்குறிச்சியில் போர்க்கோலம்.. பள்ளியில் உச்சகட்ட பதற்றம்!!Representative Image.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரண விவகாரத்தில் போராட்டம் நடத்திய பள்ளி மாணவர் அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, கல்வீசித் தாக்கி வன்முறையில் ஈடுபட்டதால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஹாஸ்டலில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இவர் கடந்த 13 ஆம் தேதி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோரிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இது ஏற்கனவே அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று சாலைமறியலில் ஈடுபட்ட அவர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டு போராட்டம் நடத்தினர். இதனால் சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஸ்தம்பித்தது.

இந்நிலையில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி மாணவர் அமைப்பினர் பள்ளி வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் போலீஸ் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் கற்களை வீசி போலீசை தாக்கியதோடு வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு கருதி அங்கு மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கள்ளக்குறிச்சியில் தற்போது உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்