Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு - விடுதியில் அடிப்படை வசதி இல்லை என மாணவர்கள் புகார்

Selvarani Updated:
சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு - விடுதியில் அடிப்படை வசதி இல்லை என மாணவர்கள் புகார்Representative Image.

நாகையிலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் நலவிடுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினரிடம் அடிப்படை வசதிகள் இல்லை என மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினர்  பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவில், சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி, பழனியாண்டி, மோகன், ராமலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர்.

இவர்கள், நாகப்பட்டினம் செக்கடி தெருவில் உள்ள ஆதிதிராவிட நல அரசினர் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். விடுதி சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த குழுவினர், மாணவர்களின் அறைகளை சுற்றியுள்ள ஒட்டடை, மாணவர்கள் பயன்படுத்தும் தலையணைகளுக்கு உரையில்லாமல் அசுத்தமாக உள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர். பின்னர் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது மின்விசிறி வசதி இல்லை, குளிப்பதற்கு வாலி, கப் உள்ளிட்ட பொருட்கள் இல்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.  மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் கதவுகள் இல்லாத அவல நிலையை கண்ட குழுவினர், உடனடியாக அவற்றை சீரமைத்து, இன்று மாலைக்குள் அனைத்து வசதிகளையும் செய்து தருவதோடு அதனை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என விடுதி காப்பாளருக்கு உத்தரவிட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் qய்வால் நல்லது நடந்தால் சரிதான் என விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்