Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

6 மாதங்களில் 3வது முறை.. மோடியை சந்திப்பதை தவிர்க்கும் முதல்வர்.. என்ன காரணம்?

Sekar July 02, 2022 & 23:48 [IST]
6 மாதங்களில் 3வது முறை.. மோடியை சந்திப்பதை தவிர்க்கும் முதல்வர்.. என்ன காரணம்?Representative Image.

6 மாதங்களில் மூன்றாவது முறையாக மாநிலத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் கேசிஆர் வரவேற்க நேரடியாக செல்வதை தவிர்த்து விட்டார். இரண்டு நாட்கள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஹைதராபாத் செல்கிறார்.

சுவாரஸ்யமாக, பிரதமர் மோடி ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை அதே பேகம்பேட் விமான நிலையத்தில் கேசிஆர் நேரடியாக சென்று வரவேற்க உள்ளார். ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பதாக கேசிஆர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்று பிரதமர் வருகையின் போது, ​​தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரை மோடியை வரவேற்க கே.சந்திரசேகர் ராவ் விமான நிலையத்திற்கு அனுப்ப உள்ளார் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, பிரதமரின் கடைசி தெலுங்கானா பயணத்தின் போதும், ​​கே.சி.ஆர் மோடியை நேரடியாக வரவேற்பதைத் தவிர்க்க திடீரென பெங்களூர் கிளம்பிவிட்டார். இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் (ஐஎஸ்பி) 20வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மாநிலம் சென்றிருந்தார். 

அது அரசுமுறை பயணம் என்பதால் மாநிலத்தில் இருந்துகொண்டே வரவேற்க செல்லவில்லை என்றால் சர்ச்சையில் சிக்க நேரிடும் என்பதால் பெங்களூர் கிளம்பிவிட்டதாக அப்போது கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது கட்சி ரீதியான கூட்டத்தில் பங்கேற்க மோடி வருவதால், இந்தமுறை மாநிலத்தில் இருந்தாலும், பெரிய அளவில் சலசலப்பு வராது என அவர் நினைப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

இரண்டு நாள் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 19 மாநில முதல்வர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாளை தேசிய செயற்குழுவில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக தேசிய செயற்குழுவின் உரையிலும், வரும் காலங்களில் குறிப்பாக குஜராத் போன்ற பெரிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலைப் பார்க்கும்போது கட்சிக்கான வழிகாட்டியை பிரதமர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்