Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனிக்கட்சியெல்லாம் வேண்டாம்.. பாஜக போதும்.. முன்னாள் முதல்வர் முடிவு?

Sekar July 01, 2022 & 16:07 [IST]
தனிக்கட்சியெல்லாம் வேண்டாம்.. பாஜக போதும்.. முன்னாள்  முதல்வர் முடிவு?Representative Image.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் லண்டனில் இருந்து திரும்பியதும் பாரதிய ஜனதா கட்சியில் பாஜக முறைப்படி இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமரீந்தர் சிங் தற்போது லண்டனில் உள்ளார், அங்கு அவருக்கு சனிக்கிழமை வெற்றிகரமாக முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் அவர் இந்தியாவுக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வந்தவுடன் பாஜகவில் கட்சியை இணைக்கும் செயல்முறை தொடங்கும் என அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

பஞ்சாப் லோக் காங்கிரஸ் உருவான வரலாறு

கடந்த ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கினார்.

இதற்கிடையே காங்கிரசில் இருந்த அவருக்கு நெருக்கமான மூத்த தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணியமைத்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் போட்டியிட்டது. எனினும் அமரீந்தரால் வெற்றி பெற முடியவில்லை. ஆட்சியிலிருந்த காங்கிரஸும் ஆம் ஆத்மியிடம் வீழ்ந்தது தனிக்கதை.

சட்டசபைத் தேர்தலில் தனது கட்சி ஒரு இடத்தைக் கூட வெற்றி பெறாத நிலையில், அவர் படிப்படியாக அரசியல் நடவடிக்கையைக் குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில், ஆம் ஆத்மீ கட்சி ஆட்சியைத்த மூன்றே மாதங்களில் பஞ்சாபில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதால், தற்போது கட்சியை பாஜகவுடன் இணைத்து, பாஜக உதவியுடன் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அமரீந்தர் திட்டமிட்டு வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்