Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கேரளா ஆர்வலர் ரெஹானா பாத்திமா 'நிர்வாண' வழக்கு...நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Kerala Activist Rehana Fathima

Priyanka Hochumin Updated:
கேரளா ஆர்வலர் ரெஹானா பாத்திமா 'நிர்வாண' வழக்கு...நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Kerala Activist Rehana FathimaRepresentative Image.

கேரளாவைச் சேர்ந்த ஆர்வலர் ரெஹானா பாத்திமா, திங்களன்று போக்ஸோ வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். யார் இந்த ரெஹானா பாத்திமா, எதனால் கைது செய்யப்பட்டார், இவர் ஆர்வலராக செய்த பணிகள் குறித்த அனைத்து விவரத்தையும் பாப்போம்.

ரெஹானா பாத்திமா கைது செய்யப்பட்ட காரணம்?

ரெஹானா பாத்திமா ஒரு முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தனர். இவர் மதரஸா வகுப்புகளுக்குச் சென்று ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யும் கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்த்தவர். ஆனால் அவரின் தந்தை மரணத்திற்கு பின்னர் மதம் பற்றிய அவரின் கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, தனது மதத்தில் இருந்த கட்டுப்பாடுகளை மீறி பல விஷயங்களை செய்து வர ஆரம்பித்தார். இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பாத்திமா பாதி நிர்வாணமாக நின்று அவரின் மைனர் குழந்தைகள் ஓவியம் வரையும் காட்சிகளாய் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் பல முறை பெயில் வாங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு

திங்களன்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கவுசர் எடப்பகத் பாத்திமா மீதமான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்து விடுதலை அளித்துள்ளார். இந்த வழக்கு குறித்து அவர் தெரிவித்தது, "33 வயதான ஆர்வலர் ரெஹானா பாத்திமா தனது குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததற்காக எந்த ஆதாரமும் இல்லை. மேலும், தன்னுடைய குழந்தைகள் ஓவியம் வரைவதற்காக தனது உடலை கேன்வாஸாகப் பயன்படுத்த அனுமதித்துள்ளார். இதில் குழந்தைகளின் ஓவிய ஈடுபாட்டை "பாலியல்" ரீதியாக சம்மந்தப்படுத்தி பேசுவது மிகவும் கொடுமையான விஷயம்.

ஒரு ஆண் அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி, தங்களின் உடலை நிர்வாணமாக கேன்வாஸ் பயன்பாட்டிற்கு வெளிப்படுத்துவது எந்த வகையில் பாலியல் தூண்டும் செயலாக கூற முடியாது. அதே போல், ஒரு ஆண் தனது மேல் உடலை நிர்வாணமாகக் காட்டுவது ஒருபோதும் ஆபாசமானதாகவோ அல்லது அநாகரீகமாகவோ கருதப்படுவதில்லை என்ற போது, ஏன் ஒரு பெண் தனது மேல் உடலை நிர்வாணமாக காட்டும் போது அதே வழியில் நடத்தப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பினார்.  கூடுதலாக, பெண் நிர்வாணமாக இருப்பது கெட்டது என்றும், அது பாலியல் நோக்கங்களுக்காக மட்டும் என்றும் பலரும் கருதுகின்றனர். பாத்திமா இந்த வீடியோவை பரப்புவதன் மூலம், அதன் பின் இந்த சமுதாயத்தில் இருக்கும் இரட்டை நிலையை அம்பலப்படுத்துவதே என்றும் தெரிவித்தார்.

இறுதியாக "நிர்வாணத்தை பாலியலுடன் இணைக்கக்கூடாது. ஒரு பெண் நிர்வாணமாக இருப்பதை இயல்பாகவே பாலியல் ரீதியாக கருத வேண்டாம். அதேபோல், ஒரு பெண்ணின் நிர்வாண உடலை சித்தரிப்பதை ஆபாசமானதாக, அநாகரீகமான அல்லது வெளிப்படையான பாலியல் செயலாக கருத முடியாது" என்றும் நீதிபதி கவுசர் எடப்பகத் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்