Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் பல கோடி மதிப்புள்ள உதிரிபாகங்கள் கொள்ளை - கடல்வழியே கடத்திய கும்பலால் பரபரப்பு..!!

Saraswathi Updated:
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் பல கோடி மதிப்புள்ள உதிரிபாகங்கள் கொள்ளை - கடல்வழியே கடத்திய கும்பலால் பரபரப்பு..!!Representative Image.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சுவரை துளையிட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 690 கிலோ குப்ரோ நிக்கல் பைப்புகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையம் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதில் பணிபுரிந்து வருகின்றனர். அனல் மின் நிலையத்தில் 24 மணி நேரமும் தனியார் நிறுவன செக்யூரிட்டி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அனல் மின் நிலையத்தில் உள்ள பொருள் வைப்பு (ஸ்டாக் ரூம்) அறையில் அனல் மின் நிலையத்திற்கு தேவையான பல கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பர் மற்றும் நிக்கல் கலந்த குப்ரோ நீக்கல் பைப் உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் பல கோடி மதிப்புள்ள உதிரிபாகங்கள் கொள்ளை - கடல்வழியே கடத்திய கும்பலால் பரபரப்பு..!!Representative Image

கடந்த 9ம்தேதி கடல்வழியாக படகு மூலம் வந்த கும்பல், ஸ்டாக் ரூமின் சுவற்றில் துளையிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த 690 கிலோ எடை கொண்ட 829 எண்ணிக்கையிலான குப்ரோ நிக்கல் பைப் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்களை திருடிச் சென்றுள்ளது.

10ம் தேதி வரை அங்கேயே பதுங்கியிருந்த அந்தக் கும்பல், திருடப்பட்ட பொருட்களை கடல் வழியாக படகு மூலம் கடத்திச் சென்றுள்ளது. இதுகுறித்து தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் எந்தவித புகார் அளிக்காமல் இந்த திருட்டு சம்பவத்தை மறைப்பதற்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் கழித்து பொருட்கள் கொள்ளைபோன சம்பவம் அனல் மின் நிலைய ஊழியர்களுக்கு தெரியவந்துள்ளது.
பின்னர், அனல் மின் நிலைய நிர்வாகம் பொருள் வைப்பு அறையை கண்காணிக்கும் ஊழியர்கள் நான்கு பேரை நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அனல்மின் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் மின் வாரிய லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன், உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.
அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் பாதுகாப்பையும் மீறி பல கோடி ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் கொள்ளை போயிருப்பது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்