Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சி...கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு..!

madhankumar June 29, 2022 & 12:44 [IST]
கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சி...கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு..!Representative Image.

மேலும் ஒரு குஜராத் கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் எண்ணம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பியவர்களை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர். இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டார். 

அப்போது பேசிய அவர், பாஜக மீண்டும் ஒரு மத கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறது, மோடி அவர்கள் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது மிகப்பெரிய இனக் கலவரத்தை உருவாக்கினார்கள். இதில் 2,000 பேர் கொல்லப்பட்டார்கள் அந்த 2,000 பேரும் இஸ்லாமியர்கள் தான்.அதற்கு காரணம் யார் என்பது தெரியாமல் போய்விட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையானார்கள்.

மேலும் நீதிமன்றங்களை பார்த்து நான் ஒன்று கேட்கிறேன் அனைவரும் விடுதலை ஆகிவிட்டனர் அப்படி என்றல் கொலை செய்த்தவர்கள் யார்? நம்முடைய நீதி பரிபாலனத்தில் அதுபோல் ஒரு நீதிமுறை கிடையாது.நாட்டினுடைய நலன் கருதி சாதாரண மக்களின் கேள்விகளுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். மேலும் நமது நாட்டில் 35 கோடி சிறுபான்மை இன மக்கள் வாழ்கிறார்கள் 25 கோடி தலித்துகள் வாழ்கிறார்கள் அவர்கள் இல்லாமல் ஆட்சி செய்துவிட முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அழகிரி, ஆனால் இன்று ஆளும் அரசு ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே இறைவழிபாடு என்பது எப்படி சாத்தியமாகும். பல நடுகல் சேர்ந்தது தன இந்தியா.. பாஜக செய்தி தொடர்பாளர் முகமது நபியை விமர்சித்துள்ளார், அந்த மதத்தை சேராத அவர் எப்படி மாற்று மதத்தினரை விமர்சிக்கலாம் வாறு செய்தால் கலவரம் தான் ஏற்படும்.

மக்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படத்தான் செய்யும், மக்கள் இதனால் பிளவுபட்டுதான் இருப்பார்கள். அதுதான் அவர்களது நோக்கமாக உள்ளது. மீண்டும் ஒரு குஜராத் கலவரத்தை உருவாக்குவதே அவர்களது நோக்கமாக உள்ளது. இது அவருடைய கருத்தாக இல்லை ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியின் கருத்து என்னவோ அதுவாகத் தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்