Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,052.97
-436.02sensex(-0.60%)
நிஃப்டி21,857.25
-138.60sensex(-0.63%)
USD
81.57
Exclusive

உடனே மன்னிப்பு கேளுங்க....இந்திய அரசை வலியுறுத்தும் அரபு நாடுகள்...!

madhankumar June 06, 2022 & 11:05 [IST]
உடனே மன்னிப்பு கேளுங்க....இந்திய அரசை வலியுறுத்தும் அரபு நாடுகள்...!Representative Image.

உலகம் முழுவதும் உள்ள 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களின் மனது புண்படும் வகையில் பேசிய பாஜக நிர்வாகிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அரபு நாடுகள் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். 

நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்து குறித்து உரிய விளக்கமளிக்க இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பியுள்ளது. இஸ்லாமிய மதம் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததற்காக, இந்திய துாதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கத்தார் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து  கருது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இதனிடையே பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட விவகாரம் தற்போது பெரிதாக வெடித்துள்ளது.

வழக்கு பதிவு:

இந்த பிரச்னை தொடர்பாக நுபுர் சர்மா மீது இபிகோ 153ஏ - மத மோதலை தூண்டும் விதமான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், நுபுர் சர்மாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கான்பூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பின் தலைவர் சபார் ஹயத் ஹாஸ்மி பந்த்-க்கு அழைப்பு விடுத்தார்.

போராட்டம்:

இந்த முழு அடைப்பின் பொது சிலர் கடைகளை மூடமாட்டோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அப்போது அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கற்களை எரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் மதமோதல் ஏற்பட்டது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நுபுர் சர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனிடையே பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது என பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரபு நாடுகள் கண்டனம்:

நபிகள் நாயகம் அவமதிப்பு பிரச்சனை அரபு நாடுகள் வரை எதிர்ப்பு அலையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க இந்திய தூதருக்கு கடிதம் அனுப்பியுள்ளது பாஜக அரசிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கத்தார் நாட்டை தொடர்ந்து ஈரான் மற்றும் குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கத்தார் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நபிகள் நாயகம் தொடர்பாக இந்தியாவில் ஆளும் கட்சியான பாஜக நிர்வாகிகள் அவதூறு கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்திய தூதரை வரவழைத்து அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளோம், மேலும் இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெறுப்பு பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தீவிரவாதம், வெறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் மிதவாதத்தின் கருத்துகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என குவைத் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அது போல் ஈரானும் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்