Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காப்பாத்துங்க காப்பாத்துங்க.. வீட்டு கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை.. போராடி மீட்ட வனத்துறை!!

Sekar October 08, 2022 & 15:28 [IST]
காப்பாத்துங்க காப்பாத்துங்க.. வீட்டு கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை.. போராடி மீட்ட வனத்துறை!!Representative Image.

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள புதியடத்தில் உள்ள ஒரு வீட்டின் கிணற்றில் சிறுத்தைப்புலி ஒன்று தவறி விழுந்தது. வனவிலங்கு அதிகாரிகள் பல மணி நேர முயற்சிக்கு பின் கிணற்றில் இருந்து சிறுத்தையை மீட்டனர். 

வடக்கு வயநாட்டில் உள்ள வேகூர் வனப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பலமுறை மோட்டாரை இயக்கியும் தண்ணீர் வெளியேறாததை உணர்ந்த குடும்பத்தினர் காலை 6 மணியளவில் கிணற்றில் புலி விழுந்தது தெரிய வந்ததாக வீட்டின் உரிமையாளர் ஜோஸ் தெரிவித்தார். காலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறுத்தை நீர் பம்புகளை சேதப்படுத்தியது; அதனால் தான் எங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றார். கிணற்றில் வலையொன்று இருந்தபோதிலும், அந்த விலங்கு எப்படியோ தவறுதலாக அதன் வழியாக விழுந்துவிட்டதாக மூத்த வனவிலங்கு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வடக்கு வயநாடு டிஎஃப்ஓ மார்ட்டின் லோவல் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மயக்க ஊசி செலுத்தும் பிரிவு வயநாட்டில் இல்லாததால் மீட்பு பணி தாமதமானது. இதையடுத்து தமிழ்நாடு வனவிலங்குத் துறையிடம் உதவி கேட்கப்பட்டு 30 அடி ஆழ கிணற்றில் இருந்து சிறுத்தை மீட்கப்பட்டது. முதற்கட்ட பராமரிப்புக்காக, சிறுத்தை கால்நடை பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தற்போதைக்கு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், காட்டுக்குள் விடப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்