Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரிட்டன் பிரதமர் தேர்தல் முடிவு வெளியானது.. ரிஷி சுனக் வெற்றி பெற்றாரா?

Sekar September 05, 2022 & 17:37 [IST]
பிரிட்டன் பிரதமர் தேர்தல் முடிவு வெளியானது.. ரிஷி சுனக் வெற்றி பெற்றாரா?Representative Image.

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் லிஸ் ட்ரஸ் தனது போட்டியாளரான இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கை தோற்கடித்து பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ளார். மேலும் நாற்பத்தேழு வயதான இவர் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் எனும் சிறப்பையும் பெற்றுள்ளார்.

பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் நாடு எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க தவறிவிட்டார் என அவரது அமைச்சரவை சகாக்கள் ஒவ்வொருவராக பதவி விலகியதை அடுத்து பிரதமரும் பதவி விலகினார்.

இதையடுத்து அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு நடந்த போட்டியின் பல கட்ட சுற்றுகளில் முன்னேறி இந்திய வம்சாவளி ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர். கட்சியினர் உறுப்பினர்கள் அனைவரும் இதில் வாக்களித்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்புகள் முடிந்து இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் எனும் சிறப்பையும் பெற்றுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்