ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் நுழைவாயில் அருகே தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள ரஷ்ய நாட்டின் தூதரகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு ரஷ்ய தூதர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலை நடத்தியவர் வாயிலை நெருங்கும் போது ஆயுதம் தாங்கிய காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
"இலக்கை அடையும் முன் தற்கொலை தாக்குதல் நடத்தியவர், ரஷ்ய தூதரகத்தில் பணியில் இருந்த தலிபான் காவலர்களால் அடையாளம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை" என்று தாக்குதல் நடந்த காவல் மாவட்டத்தின் தலைவர் மவ்லவி சபீர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், காபூலில் தங்கள் தூதரகத்தை திறந்த சில நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…