Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Madhya Pradesh Assembly Election 2024 | அடுத்த தேர்தலுக்கு ரெடி.. இந்த முறை 150 சீட்கள் குறிக்கோள்.. - ராகுல் காந்தி!

Nandhinipriya Ganeshan Updated:
Madhya Pradesh Assembly Election 2024 | அடுத்த தேர்தலுக்கு ரெடி.. இந்த முறை 150 சீட்கள் குறிக்கோள்.. - ராகுல் காந்தி! Representative Image.

கர்நாடகாவில் கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவி ஏற்றனர். இந்த நிலையில், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 2024 பொதுத் தேர்தலுக்கு முந்தைய தேர்தல் என்பதால் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "கர்நாடகா வெற்றியை தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி தனது வெற்றிப் பயணத்தை தொடரும் என்றார். மேலும் தேர்தல் வியூகம் மற்றும் பிரச்னைகள் குறித்து அனைவரும் விவாதித்ததாக கூறினார். கர்நாடகாவில் 136 இடத்தில் வெற்றி பெற்றதாக தெரிவித்த அவர், மத்தியப் பிரதேசத்தில் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்