Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

MK Stalin Japan Visit | முதல்வரின் சிங்கப்பூர், ஜப்பான் அரசு முறை பயணம்.. எதுக்கு தெரியுமா?

Nandhinipriya Ganeshan Updated:
MK Stalin Japan Visit | முதல்வரின் சிங்கப்பூர், ஜப்பான் அரசு முறை பயணம்.. எதுக்கு தெரியுமா?Representative Image.

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, கடந்த மே 23, 2023 அன்று சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, மே 25, 2023 அன்று ஜப்பான் நாட்டின் ஒசாகா சென்றார். அங்கு தனது இரண்டு நாள் ஒசாகா பயனத்தை முடித்துக்கொண்டு மே 27, 2023 அன்று டோக்கியோ வந்தடைந்தார். 

பின்னர், மே 28 ஆம் தேதி ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (Japan External Trade Organization - JETRO) தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ அவர்களையும், செயல் துணை தலைவர் கசுயா நகஜோ அவர்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார். அதன்பிறகு அவர்களிடம் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர், தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

மேலும், ஜனவரி 2024 ல் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டார்கள் மாநாட்டிற்கு (Global Inverstors Summit in Chennai 2024) அழைப்பு விடுத்தார். பின்னர், JETRO தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அழைப்பு விடுத்ததற்கும், ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட தமிழ்நாடு அரசு அளித்துவரும் ஆதரவிற்கும் தனது நன்றியை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சென்னையில் நடைபெறவுள்ள '2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடு' வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்